Seeman 22 March 2015 found Whistling and Enjoying the Si Pa Aditanar Game Wing activites
சீமான் விசிலடித்து ரசித்தார்
நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் விளையாட்டு பாசறை தொடக்க விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 2 நாட்களாக அங்கு கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
இதன் இறுதிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த அண்ணாநகர் தம்பி கபடி அணியினர் 25-15 என்ற புள்ளி கணக்கில் துரைகோபால் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றனர். 3-வது மற்றும் 4-வது இடங்களை முறையே ஜாலி நண்பர்கள் குழு, ஆதித்தனார் விளையாட்டு பாசறை அணியினர் பெற்றனர்.
முதலிடத்தை பிடித்த அணிக்கு பாலச்சந்திரன் நினைவுக்கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும், 2-வது இடம் பிடித்த அணிக்கு, வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவுக்கோப்பை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பரிசும், 3-வது இடம் பிடித்த அணிக்கு மொழிப்போர் தியாகி சிவகங்கை இராசேந்திரன் நினைவுக்கோப்பை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்க பரிசும், 4-வது இடம் பிடித்த அணிக்கு அப்துல்ரவூப் நினைவுக்கோப்பை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
ஊக்கப்பரிசாக முத்துக்குமார் நினைவுக்கோப்பை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசும், செங்கொடி நினைவுக்கோப்பை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக திரைப்பட நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி கலந்து கொண்டார்.
சி.பா.ஆதித்தனார் விளையாட்டு பாசறை செயலாளர் வெங்கடேஷ், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு தென்னரசன், கலைக்கோட்டூதயம், ‘தடா’ சந்திரசேகர், மாவட்ட செயலாளர் மா.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாம் தமிழர் கட்சி- சி.பா.ஆதித்தனார் விளையாட்டு பாசறையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக சீமான் அளித்த பேட்டியில், ‘உடலினை உறுதி செய், அறிவைப் பெருக்கு, கொள்கை வகுத்து நில் என்ற தாரக மந்திரத்துடன் சி.பா.ஆதித்தனார் விளையாட்டு பாசறை தொடங்கப்பட்டுள்ளது. கபடி, சிலம்பு போன்ற தமிழர்களின் மண் சார்ந்த விளையாட்டுகளை பாதுகாத்தவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்.
தமிழகம் முழுவதும் வீதிகள் தோறும், கிராமங்கள் தோறும் தமிழர்களின் அடையாளங்களான கபடி, சிலம்பு போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இதன் மூலம் சிறந்த விளையாட்டு வீரர்-வீராங்கணைகளை அடையாளம் கண்டு, அவர்களை உலக அளவுக்கு கொண்டு செல்லும் பணியை பாசறை மேற்கொள்ளும்’ என்றார்.
Director Seeman, Film Director Seeman, Game Wing, Indian Political Parties, Indian Politics, Naam Tamilar, Naam Tamilar Game Wing, Naam Tamilar Katche, Naam Tamilar Katchi, Naam Tamilar Party, Naam Tamilar Political Party, Naam Tamizhar, Naam Tamizhar Katche, Naam Tamizhar Katchi, naam thamilar, Naam Thamilar Katche, Naam Thamilar Katchi, naam thamizhar, Naam Thamizhar Katche, Naam Thamizhar Katchi, NTK, NTK 2015, NTK 2015 March, Political Parties, Political Parties 2015, Political Parties 2015 March, Politician, Politician 2015, Politician 2015 March, Politician Seeman, Politics, Politics 2015, Politics 2015 March, Seaman, Seeman, Seeman 2015, Seeman 2015 March, Tamil Desiya Politician, Tamil Director Seeman, Tamil Film Director Seeman, Tamil Movie Director Seeman, Tamil Nadu Political Parties, Tamil Nadu Political Parties 2015, Tamil Nadu Political Parties 2015 March, Tamil Nadu Politics, Tamil Nadu Politics 2015, Tamil Nadu Politics 2015 March, Tamilnadu Politician, Tamilnadu Politician 2015, Tamilnadu Politician 2015 March, அரசியல், அரசியல் 2015, அரசியல் 2015 மார்ச், அரசியல் கட்சி, அரசியல் கட்சிகள், அரசியல் கட்சிகள் 2015, அரசியல் கட்சிகள் 2015 மார்ச், அரசியல்வாதி, அரசியல்வாதி 2015, அரசியல்வாதி 2015 மார்ச், அரசியல்வாதி சீமான், இந்திய அரசியல், இந்திய அரசியல் கட்சிகள், இயக்கம், இயக்குனர் சீமான், இயக்குனர் சீமான் 2015 மார்ச், சி.பா.ஆதித்தனார், சி.பா.ஆதித்தனார் விளையாட்டு பாசறை, சீமான், சீமான் 2015, சீமான் 2015 மார்ச், தமிழர் இயக்கம், தமிழர் கட்சி, தமிழ் இயக்குனர் சீமான், தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான், தமிழ் தேசிய கட்சி, தமிழ்த்தேசிய அரசியல்வாதி, தமிழ்நாடு அரசியல், தமிழ்நாடு அரசியல் 2015, தமிழ்நாடு அரசியல் 2015 மார்ச், தமிழ்நாடு அரசியல் கட்சிகள், தமிழ்நாடு அரசியல்வாதி, தமிழ்நாடு அரசியல்வாதி 2015, தமிழ்நாடு அரசியல்வாதி 2015 மார்ச், திரைப்பட இயக்குனர் சீமான், நாதக, நாதக 2015, நாதக 2015 மார்ச், நாதக NTK, நாம் தமிழர், நாம் தமிழர் இயக்கம், நாம் தமிழர் கட்சி